திருமணம் குறித்து விஜய் அறிக்கை!

Vijay Statement about Marriage

செய்திகள் 26-Apr-2014 11:08 AM IST VRC கருத்துக்கள்

சமீபகாலமாக கோலிவுட்டிலும் மீடியாக்களிலும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விவகாரம் இயக்குனர் விஜய் - நடிகை அமலாபால் காதல் விவகாரம்! இது சம்பந்தமாக இயக்குனர் விஜய்யும், நடிகை அமலா பாலும் நாங்கள் ஒன்றாகவே மீடியாவை சந்தித்து எங்களது காதல் குறித்தும், திருமணம் குறித்தும் விரைவில் அறிவிக்க இருக்கிறோம் என்று கூறியிருந்தனர். இந்நிலையில் நேற்று இயக்குனர் விஜய் எல்லா மீடியாக்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதில்,

‘‘ஒருவராக இருந்து இருவராக மாற உள்ள எனது நிலையைப் பற்றி சொல்வதற்கு இதை ஒரு சிறந்த சந்தர்பமாகக் கருதுகிறேன். எனது வாழ்க்கைத் துணையை தேடியது முடிவடைந்து, எனது மனம் கவர்ந்த காதலை அமலாவிடம் கண்டேன்! அமலா நல்ல மனம் கொண்டவர் என்பது எனக்குத் தெரியும். அவர் உண்மையாகவே ஒரு பொக்கிஷம். அதை கண்ணும் கருத்துமாக காதலுடன் பாதுகாப்பேன்.

எங்களது திருமண திட்டத்தை கண்ணியமாகவும், முறையாகவும் நாங்களே அறிவிக்க வேண்டும் என்று இருந்தோம். ஆனால், எங்களுக்குத் தெரியாமலே அந்த செய்தி வெளியில் வந்து விட்டது. பத்திரிகையாளர்களிடமும், என் நண்பர்களிடமும், எங்களுக்கு வேண்டப்பட்டவர்களிடமும் எங்களது திருமண திட்டத்தைப் பற்றி நாங்கள் மூடி மறைக்க வேண்டும் என்று ஒருபோதும் நினைத்து இல்லை. மீடியா நண்பர்களையும் என் தனிப்பட்ட நண்பர்களையும் திருமண அழைப்பிதழுடன் சந்தித்து எங்களது மரியாதையை வெளிப்படுத்த நினைத்திருக்கிறோம். அமலா பால் கமிட் ஆன வேலைகளை முடிக்க வேண்டும். நானும் ‘சைவம்’ படத்தின் வெளியீட்டில் பிசியாக இருக்கிறேன். இதெல்லாம் முடித்த பின்தான் எங்களது வாழ்க்கையின் மிக முக்கியமான கொண்டாட்டத்திற்கு நேரம் ஒதுக்க முடியும். அதுவரை என்றென்றும் உங்களது வாழ்த்துக்களையும், ஆசீர்வாதங்களையும், ஆதரவையும் வேண்டுகிறோம் ’’ என அதில் குறிப்பிட்டுள்ளார் விஜய்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலையில்லா பட்டதாரி 2 - டிரைலர்


;