விறுவிறு படப்பிடிப்பில் டாணா!

விறுவிறு படப்பிடிப்பில் டாணா!

செய்திகள் 25-Apr-2014 1:49 PM IST VRC கருத்துக்கள்

’மான் கராத்தே’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘டாணா’ படத்தின் ஷூட்டிங்கில் பிசியாகி விட்டார் சிவகார்த்திகேயன்! ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் ஜோடி சேர்ந்து கலக்கிய சிவகார்த்திகேயனும், ஸ்ரீதிவ்யாவும் மீண்டும் இணைந்து நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகேயுள்ள மகேந்திரா சிட்டியில் சமீபத்தில் நான்கு நாட்கள் நடந்தது! அங்கு நடந்த படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் – ஸ்ரீதிவ்யா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கியுள்ளார் இயக்குனர் துரை செந்தில்குமார்! ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ சார்பில் நடிகர் தனுஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வரவிருக்கும் ’டாணா’வின் படப்பிடிப்பு இப்போது படு வேகம் பிடித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;