இயக்குனராகும் பிரபல தயாரிப்பாளர்!

இயக்குனராகும் பிரபல தயாரிப்பாளர்!

செய்திகள் 25-Apr-2014 12:59 PM IST VRC கருத்துக்கள்

வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து படங்களை தயாரிப்பதில் கெட்டிக்காரர் சி.வி.குமார். இவர் தயாரிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற படங்கள் தான் ’பீட்சா’, 'அட்டகத்தி', 'சூதுகவ்வும்', 'வில்லா', 'தெகிடி' போன்றவை! தற்போது விஷ்ணு நடிப்பில் 'முண்டாசுப்பட்டி' படத்தையும், சித்தார்த் நடிப்பில் 'லூசியா' கன்னட படத்தின் தமிழ் ரீ-மேக்கையும் தயாரித்துக் கொண்டிருக்கிறார். இப்படி வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து தயாரித்து, தமிழ் சினிமாவில் வெற்றிப்பட தயாரிப்பாளராக வலம் வரும் சி.வி.குமார், அடுத்து இயக்குனராகவும் களம் இறங்க உள்ளார்! இப்போது அதற்கான கதை தேர்வில் பிசியாக இருக்கிறாராம் சி.வி.குமார்! கதை முடிவானதும் அதில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்களை அறிவிக்க இருக்கிறார் சி.வி.குமார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் - trailer


;