வேட்டைக்கு தயாராகும் படம்!

வேட்டைக்கு தயாராகும் படம்!

செய்திகள் 25-Apr-2014 12:34 PM IST VRC கருத்துக்கள்

ரஜினிகாந்த், விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களை வைத்து பல படங்களை இயக்கியவர் மனோபாலா. கடந்த சில வருடங்களாக சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் மனோபாலா, சமீபத்தில் ஒரு படத்தை தயாரித்துள்ளார். படத்தின் பெயர் - ’சதுரங்கவேட்டை’. இந்தப் படத்தை ஹெச். வினோத் இயக்கியிருக்க, கதையின் நாயகனாக நட்ராஜ் நடித்திருக்கிறார். இந்தப் படத்திற்கான பாடல்களை கவிப்பேரரசு எழுத, ஷான் ரால்டன் இசை அமைத்துள்ளார். ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நாளை மறுநாள் (27-4-14) சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெறவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சதுரங்க வேட்டை 2 - டீஸர்


;