துல்கர் சல்மானை நடிக்க வைக்க காரணம்?

துல்கர் சல்மானை நடிக்க வைக்க காரணம்?

செய்திகள் 25-Apr-2014 12:28 PM IST VRC கருத்துக்கள்

பாலாஜி மோகன் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள படம் ‘வாயை மூடி பேசவும்’. தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகி, வெளியாகியுள்ள இப்படத்தில் துல்கர் சல்மானை ஹீரோவாக நடிக்க வைத்ததது குறித்து பாலாஜி மோகன் இப்படி கூறுகிறார்!
‘‘பார்த்தால் உடனே பிடிக்கிற மாதிரியான ஒரு முகம் இந்த கதைக்கு தேவைப்பட்டது. துல்கர் சல்மான் மலையாளத்தில் நடித்த ‘உஸ்தாத் ஹோட்டல்’ படத்தை பார்த்திருக்கிறேன்! அந்த படத்தை பார்த்ததும் அவரை எனக்கு ரொம்பவும் பிடித்து விட்டது! ‘வாயை மூடி பேசவும்’ கதைக்கு தமிழின் இளம் ஹீரோக்களை விட துல்கர் ரொம்பவும் பொருத்தமாக இருப்பார் என்று எனக்கு தோன்றியது! தமிழ் படங்களிலும் நடிக்க ஆர்வமாக இருந்த துல்கர் சல்மான் நல்ல ஒரு ஸ்கிரிப்ட்டுக்காக காத்திருந்த நேரத்தில் தான் நான் அவரை சந்தித்து நான் இப்பட கதையை சொன்னேன்! அவருக்கும் கதை ரொம்பவுக்ம் பிடித்து போகவே, படம் தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் தயாரானது’’ என்கிறார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரிச்சி - டீசர்


;