முதல் கட்ட படப்பிடிப்பை முடித்த பூஜை!

முதல் கட்ட படப்பிடிப்பை முடித்த பூஜை!

செய்திகள் 23-Apr-2014 4:54 PM IST VRC கருத்துக்கள்

‘தாமிரபரணி’ படத்திற்கு பிறகு மீண்டும் ஹரி – விஷால் இணைந்துள்ள படம் ’பூஜை’. இந்தப் படத்தின் மூலம் விஷாலுடன் முதன் முதலாக ஜோடி சேர்ந்துள்ளார் ஸ்ருதி ஹாசன்! சமீபத்தில் சென்னையில் துவங்கிய இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது! முக்கோண காதல் கதை என்று சொல்வது போல் முக்கோண ஆக்‌ஷன் கதையாக உருவாகி வரும் இப்படத்தில் விஷாலுடன் முக்கிய கேரக்டரில் சத்யராஜும் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இப்படத்தை விஷாலின் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது! சூப்பர் ஹிட் ஆன ‘சிங்கம் 2’ படத்திற்கு பிறகு ஹரி இயக்கும் படம் இது என்பதால் இப்படத்தின் மீது இப்போதே எக்கச்சக்க எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;