அஜித் வழியில் மம்முட்டி!

அஜித் வழியில் மம்முட்டி!

செய்திகள் 23-Apr-2014 2:37 PM IST VRC கருத்துக்கள்

பிரியாணி செய்வதில் நடிகர் அஜித் கெட்டிக்காரர் என்பது சினிமாவிலுள்ள பெரும்பாலானோருக்கும் தெரியும்! ஒரு சில படங்களின் பிடிப்பின்போது அவர் கைப்பட சுவையான பிரியாணி செய்து கொடுத்த சம்பவங்கள் எல்லோருக்கும் நினைவிருக்கலாம்! அஜித் வரிசையில் இப்போது மலையாளத்தின் மெகா ஸ்டார் மம்முட்டியும் இணைந்து விட்டார் போலும்! மம்முட்டி தற்போது நடித்து வரும் படம் ‘மங்கிலீஷ்’. இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடந்து வருகிறது. இப்படத்தில் கடலோர கிராமத்தை சேர்ந்த மீனவராக நடிக்கும் மம்முட்டி, நேற்று நடந்த படப்பிடிப்பின் இடைவேளையில் திடீரென்று சமையல்காரராக மாறி, தன் கையால் சுடச் சுட மட்டன் பிரியாணி செய்து யூனிட்டில் உள்ள அத்தனை பேருக்கும் வழங்கி ஒரு சர்ப்ரைஸ் ட்ரீட் கொடுத்திருக்கிறார்! இந்த சம்பவம் தான் மோலிவுட்டின் தற்போதைய ஹாட் டாபிக்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;