கதையே இல்லாத பார்த்திபன் படத்தின் கதை என்ன?

கதையே இல்லாத பார்த்திபன் படத்தின் கதை என்ன?

செய்திகள் 23-Apr-2014 2:06 PM IST VRC கருத்துக்கள்

பல வித்தியாசனமான படங்களை தந்த பார்த்திபன் தற்போது இயக்கி வரும் படம் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’. ‘கதை இல்லாத படம்’ என்ற அடைமொழியோடு வரும் இப்படத்தில் விக்ரம், விஜய்சேதுபதி, ஆர்யா, பிர்காஷ் ராஜ், அமலா பால், நஸ்ரியா நசீம் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறது. ‘கதை இல்லாத படம்’ என்ற விளம்பரத்துடன் வளர்ந்து வரும் இப்படத்தின் கதை என்னவாம்?

ஒரு படத்தின் கதை டிஸ்கஷனே இப்படத்தின் கதை களமாம்! அப்படி அந்தப் படத்தின் கதை பற்றி விவாதிக்கும்போது, அந்த விவாதத்தில் வரும் காட்சிகளை ரசிகர்களுக்கு பிரபலமான நடிகர் – நடிகைகளை நடிக்க வைத்து காட்டுவதே இப்படத்தின் திரைக்கதை! லேட்டஸ்ட் தகவலின் படி இந்தப் படத்தின் ஒரு பாடல் காட்சியில் ஆடுவதற்கு பிரபுதேவாவை கூட பார்த்திபன் அழைத்தார் என்றும், ஆனால் அவர் ஹிந்திப் படங்களில் படு பிசியாக இருப்பதால், அவருக்கு பதிலாக சிவகார்த்திகேயனை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாஸ்கர் ஒரு ராஸ்கல் - teesar


;