கமல் நடிக்கும் ‘வீர விளையாட்டு’!

கமல் நடிக்கும் ‘வீர விளையாட்டு’!

செய்திகள் 23-Apr-2014 9:28 AM IST Chandru கருத்துக்கள்

‘விஸ்வரூபம்2’, ‘உத்தம வில்லன்’ படங்களைத் தொடர்ந்து கமல் ‘த்ரிஷ்யம்’ படத்தின் ரீமேக்கில்தானே நடிக்கிறார்... இது என்ன புதிய படமாக இருக்கிறதே என ஆச்சரியப்பட வேண்டாம். ‘வீர விளையாட்டு’ என்பது கமல் நடிக்கும் படம்தான், ‘ஆனால்’ நிஜத்தில் அல்ல... ‘உத்தமவில்லன்’ படத்தில்! இப்படத்தில் மனோரஞ்சன் எனும் நடிகராக கமல் நடிக்கிறார். அந்த மனோரஞ்சன் நடிக்கும் படம்தான் இந்த ‘வீர விளையாட்டு’.

ரமேஷ் அரவிந்த் இயக்கும் ‘உத்தம வில்லன்’ படத்தில் கமலுடன் ஆன்ட்ரியா, பூஜாகுமார், பார்வதி நாயர், ஜெயராம், நாசர், ஊர்வசி, இயக்குனர்கள் கே.பாலசந்தர், கே.விஸ்வநாத் ஆகியோர் நடிக்கிறார்கள். திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பவர் ஜிப்ரான். பரபரப்பான படப்பிடிப்பில் இருக்கும் இப்படத்தை தீபாவளிக்கு முன்பே ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;