ஜாம் பஜாரில் ஆர்யா சண்டை!

ஜாம் பஜாரில் ஆர்யா சண்டை!

செய்திகள் 22-Apr-2014 12:36 PM IST Inian கருத்துக்கள்

‘ஆரம்பம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு விஷ்ணூவர்தன் இயக்கும் படம் ‘யட்சன்’. இப்படத்தை யுடிவி நிறுவனத்துடன் இணைந்து விஷ்ணுவர்தன் தயாரித்து வருகிறார். ரொமான்டிக் ஆக்‌ஷன் படமாக தயாராகி வருகிறது. ஆர்யா மற்றும் சண்டைப் பயிற்சியாளர்கள் சம்பந்தப்பட்ட ஒரு அதிவேக சண்டைக் காட்சியை, சென்னை, திருவல்லிகேனி ஜாம் பஜார் மார்க்கெட்டில் படமாக்கி வருகிறார் விஷ்ணுவர்தன். ‘நெரிசல் மிகுந்த இப்பகுதியில் சண்டைக்காட்சி படமாக்கப்படுவது பெரிய சவால் என்றும், படத்தில் இந்தக் காட்சி பேசப்படும் காட்சியாகவும் இருக்கும்’ என்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன்.

‘யட்சன்’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தொடர்ந்து சென்னையில் 20 நாட்கள் நடைபெறுகிறது. ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு வரும் இப்படம் ‘ஆரம்பம்’ படத்தில் இடம்பெற்ற ஆக்‌ஷன் காட்சிகளைப்போன்று இருக்குமாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இது வேதாளம் சொல்லும் கதை - டீசர்


;