‘மான் காரத்தே’ படத்தின் மீது புதிய சர்ச்சை!

‘மான் காரத்தே’ படத்தின் மீது புதிய சர்ச்சை!

செய்திகள் 22-Apr-2014 11:00 AM IST Chandru கருத்துக்கள்

ஒரு படம் ‘டைட்டில்’ வைக்கப்பட்டு பூஜைபோடுவதிலிருந்து படம் ரிலீஸாவதற்குள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை சமீபகாலமாகவே தமிழ் சினிமாவில் அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலைக்கு உட்பட்டிருக்கும் சமீபத்திய படம் ‘மான் கராத்தே’. இப்படம் ரிலீஸானதிலிருந்து பல்வேறு சர்ச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

இப்படத்திற்கு வரிச்சலுகை அளித்ததற்கு எதிராக, ‘கராத்தே’ என்பது தமிழ்ச்சொல் அல்ல, எனவே வரி விலக்கை ரத்து செய்ய வேண்டும் என ஆரம்பத்தில் ஒருவர் கண்டனம் தெரிவித்திருந்தார். அதன்பிறகு இப்படத்தில் வரும் ஒரு குறிப்பிட்ட காட்சியில் திருவள்ளுவரையும், திருக்குறளையும் கேலி செய்திருப்பதாகக் கூறி அந்தக் காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும் என ஒருசிலர் கோரிக்கை எழுப்பினர். தற்போது, குத்துச்சண்டையை இழிவுபடுத்தும் வகையில் ‘மான் கராத்தே’ படத்தில் காட்சிகள் இருப்பதாக ஆட்சேபம் தெரிவித்து தமிழ்நாடு குத்துச்சண்டை கழகம் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த புகார் மனுவில், ‘‘சமீபத்தில் திரைக்கு வந்துள்ள மான் கராத்தே படம் குத்துச் சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் குத்துச்சண்டையை இழிவுபடுத்தும் வகையில் நிறைய காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அந்தக் காட்சிகள் நீக்கப்பட வேண்டும். தமிழ்நாடு குத்துச்சண்டை கழகத்திடம் உரிய அனுமதி பெற்று குத்துச்சண்டை தொடர்பான காட்சிகளை எடுத்திருக்கலாம். ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை. எனவே, இது சட்டத்திற்கு புறம்பான செயல். ஆகவே இப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மான் கராத்தே படத்தை தடை செய்யவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புகார் மனு குறித்து விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;