தேதி குறிச்சாச்சு விஜய் – அமலா பாலுக்கு!

தேதி குறிச்சாச்சு விஜய் – அமலா பாலுக்கு!

செய்திகள் 22-Apr-2014 10:39 AM IST VRC கருத்துக்கள்

தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் காதல் ஜோடி இயக்குனர் விஜய் - நடிகை அமலாபால்! இருவரும் ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்து வருவதாகவும், விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்கவிருப்பதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இயக்குவர் விஜய் தனது ’சைவம்’ பட வேலை விஷயமாக வெளிநாடு சென்றிருந்தார்! அவர் வெளிநாட்டிலிருந்து திரும்பியதும் விஜய்யும், அமலாபாலும் இணைந்து தங்களது திருமண விஷயத்தை அறிவிப்பதாக கூறி இருந்தார்கள்! ஆனால் அதற்கு முன்னதாகவே இவர்களது திருமணம் சம்பந்தமான செய்திகள் வெளியாகியுள்ளன! லேட்டஸ்ட் தகவலின்படி இவர்களது திருமண நிச்சயதார்த்தம் கொச்சியில் வருகிற ஜூன் மாதம் 7-ஆம் தேதியும், திருமணம் ஜூன் 12-ஆம் தேதி சென்னையிலும் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாஸ்கர் ஒரு ராஸ்கல் - teesar


;