சூப்பர்ஸ்டாரால் மனம் நெகிழ்ந்த தனுஷ்!

சூப்பர்ஸ்டாரால் மனம் நெகிழ்ந்த தனுஷ்!

செய்திகள் 22-Apr-2014 10:31 AM IST Top 10 கருத்துக்கள்

வளர்ந்து வரும் ஒவ்வொரு கலைஞனுக்கும் தங்கள் சினிமா வாழ்க்கையில் இவர் படத்தில் ஒரு முறையாவது இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற கனவு இருப்பது இயல்புதான். அப்படி தனுஷ் நீண்டநாட்களாக நினைத்துக் கொண்டிருந்த ஒரு விஷயம் சமீபத்தில் நிறைவேறியிருக்கிறது.

‘ரான்ஜ்னா’ படத்தின் மூலம் ஹிந்தியில் காலடி எடுத்து வைத்த தனுஷ் தன் முதல் படத்திலேயே பாலிவுட் சினிமாவின் கவனம் ஈர்த்தவர். அதோடு மட்டுமல்லாமல் அந்தப் படத்திற்காக சிறந்த அறிமுக நடிகருக்கான ‘ஃபிலிம் ஃபேர்’ விருதையும் பெற்று பலரையும் புருவம் உயர்த்த வைத்தார். இப்படத்திற்குப் பிறகு பிரபல இயக்குனர் பால்கியின் படத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார் தனுஷ். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தில் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடிக்கும் தனுஷிற்கு ஜோடியாக நடிப்பவர் கமலின் இளைய மகள் அக்ஷரா. பால்கியின் படத்தில் ஒப்பந்தமான நாளிலிருந்தே எப்போது அமிதாப்புடன் இணைந்து நடிப்போம் என ஒவ்வொரு நாளையும் எண்ணிக் கொண்டிருந்தார் தனுஷ். சமீபத்தில் அவருடன் இணைந்து நடித்த அந்த தருணத்தை ‘தன் வாழ்நாளில் மிகவும் மறக்க முடியாத நிமிடங்கள்’ என மிகவும் நெகிழ்ந்து குறிப்பிட்டிருக்கிறார் அவர்.

கோலிவுட் சூப்பர்ஸ்டாருக்கு மருமகனாகி, உலக நாயகனின் இரு மகள்களுடனும் நடித்து, தற்போது ஹிந்தி சூப்பர்ஸ்டார் அமிதாப்புடனும் இணைந்து நடிப்பது என்பது சாதாரண விஷயமா என்ன..?

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;