விஜய்க்கு 3 பாடல்கள் ரெடி!

விஜய்க்கு 3 பாடல்கள் ரெடி!

செய்திகள் 22-Apr-2014 10:06 AM IST Top 10 கருத்துக்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘கத்தி’ படத்தின் படப்பிடிப்பு ஜெட் வேகம் பிடித்திருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் விஜய்யுடன் முதன் முதலாக இணைந்துள்ளார் இசை அமைப்பாளர் அனிருத்! விஜய் நடிக்கும் படம், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படம் என்றால் ரசிகர்கள் பாடல்களை பெரிதும் எதிர்பார்ப்பார்கள்! அதை உணர்ந்தும், விஜய் நடிக்கும் படத்திற்கு தான் முதன் முதலாக இசை அமைக்கும் படம் என்பதாலும், ‘கத்தியின் பாடல்களை ஹிட் ஆக்க வேண்டும் என்று இரவு பகலாக கடுமையாக உழைத்து வருகிறார் அனிருத்! இதுவரையில் ‘கத்தி’காக மூன்று அதிரடி பாடல்களை அனிருத் உருவாக்கி விட்டாராம்! இந்தப் பாடல்கள் அனைத்தும் விஜய் மற்றும் முருகதாஸுக்கு முழு திருப்தியை தந்துள்ளதாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;