பரபரப்பான படப்பிடிப்பில் ’யுடிவி’ படங்கள்!

பரபரப்பான படப்பிடிப்பில் ’யுடிவி’ படங்கள்!

செய்திகள் 21-Apr-2014 1:12 PM IST RM கருத்துக்கள்

‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து ‘அஞ்சான்’ படத்தை தயாரித்து வரும் ‘யுடிவி’ நிறுவனம், விக்ரம் பிரபு நடிப்பில் ‘சிகர்ம தொடு’, ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம் நடிக்க, எஸ்.பி. ஜனநாதன் இயக்கும் ’புறம்போக்கு’, விஷ்ணுவரதன் இயக்கத்தில் ஆர்யா, கிருஷ்ணா நடிக்கும் ‘யட்சன்’ என ஒரே நேரத்தில் 4 படங்களின் தயாரிப்பில் படு பிசியாக இயங்கி வருகிறது! இதில் லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ’அஞ்சான்’, கௌரவ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் ‘சிகரம் தொடு’ படங்களின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது! ‘அஞ்சான்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது கோவாவில் நடந்து கொண்டிருக்க, ‘சிகரம் தொடு’, ‘புறம்போக்கு’, ;’யட்சன்’ படங்களின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ‘யுடிவி’ நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடு ‘நான் சிகப்பு மனிதன்’ என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கடுகு - டீசர்


;