அஜித் படத்தில் அனுஷ்கா புதிய முயற்சி!

அஜித் படத்தில் அனுஷ்கா புதிய முயற்சி!

செய்திகள் 21-Apr-2014 11:16 AM IST Chandru கருத்துக்கள்

எப்படிப்பட்ட கேரக்டராக இருந்தாலும், அதை ரொம்பவும் சாதாரணமாக செய்து அசத்திவிடுவார் அனுஷ்கா. அது கிளாமராக இருந்தாலும் சரி, இல்லையென்றால் ‘அருந்ததி’ போன்ற ஆன்மீக கதாபாத்திரமாக இருந்தாலும் சரி ஒரு கை பார்த்துவிடுவார். அதனால்தான் தெலுங்கிலும், தமிழிலும் அனுஷ்காவை தங்கள் படத்தில் ஜோடியாக்கிக் கொள்ள முன்னணி நட்சத்திரங்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். தற்போதுகூட எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் ‘பாஹுபலி’ படத்திலும், குணசேகர் இயக்கத்தில் ‘ருத்ரம்மாதேவி’ படத்திலும் வரலாற்று சிறப்புவாய்ந்த கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் அனுஷ்கா, அதற்காக குதிரையேற்றம், வாள் சண்டை என பலவற்றையும் கற்றுத் தேர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

2006ஆம் ஆண்டு ‘ரெண்டு’ படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமான அனுஷ்கா, இதுவரை எட்டு தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், இவர் நடித்த எல்லா படங்களிலும் இவரின் வாயசைப்புக்கு பின்னணியாக வேறொருவர்தான் குரல் கொடுத்து வந்திருக்கிறார்கள். தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் படத்தில், முதல்முறையாக தன் கேரக்டருக்கு தன்னுடைய ஒரிஜினலை குரலையே பதியவிருக்கிறாராம் அனுஷ்கா. அதுமட்டுமில்லாமல் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் அனைத்து நட்சத்திரங்களும் அவரவர் குரலிலேயே பின்னணி பேசவிருக்கிறார்களாம். ஆறடி ‘அரேபியக்குதிரை’ அனுஷ்காவின் குரலைக் கேட்க ‘தல’ ரசிகர்கள் இப்போதே வெயிட்டிங்...!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;