கமல்தான் பொருத்தமானவர்! - ரஜினி

கமல்தான் பொருத்தமானவர்! - ரஜினி

செய்திகள் 21-Apr-2014 10:58 AM IST Chandru கருத்துக்கள்

தங்களின் அறிமுக காலத்தில் ஒன்றாக இணைந்து நடித்து தமிழ்சினிமாவில் வளரத் தொடங்கியவர்கள் ரஜினியும், கமலும்! அதன் பிறகு தங்களின் வளர்ச்சிக்காக இருவரும் பிரிந்து தனித்தனியாக கதாநாயகர்களாக நடிக்கத் தொடங்கினர். அன்று முதல் இன்று வரை ரஜினியும், கமலும் இரு துருவங்களில் தங்களின் முன்னேற்றத்தில் உச்சத்தைத் தொட்டவர்கள்.

சில நேரங்களில், ரஜினி நடிக்க வேண்டிய படத்தில் கமலும், கமல் நடிக்க இருந்த படத்தில் ரஜினியும் நடித்து அந்தப் படங்கள் வெற்றிபெற்றதுண்டு. ஷங்கரின் இயக்கத்தில் ரஜினி நடித்து மாபெரும் வெற்றிபெற்ற ‘எந்திரன்’ படம், ஆரம்பத்தில் கமல் நடிக்க ‘ரோபா’வாக உருவாகவிருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இப்போதுகூட சூப்பர்ஸ்டாரே மனம் திறந்து கமலைப் பற்றிய ஒரு விஷயத்தை வெளியிட்டிருக்கிறார். ‘கோச்சடையான்’ படத்தின் தெலுங்கு வெர்ஷனான ‘விக்ரமசிம்ஹா’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி, ‘‘பல டெக்னிக்கல் விஷயங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகம் செய்து வைத்திருக்கும் ‘கோச்சடையான்’ படத்தில் நடிப்பதற்கு பொருத்தமானவர் என்றால் அது கமல்தான்!’’ என வெளிப்படையாக பாராட்டியிருக்கிறார்.

ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்காத இந்த பண்புதான் பல வருடங்களாக ரஜினி - கமல் என்ற வெற்றியாளர்களை சேர்த்து வைத்துக் கொண்டாடுகிறது இந்திய சினிமா.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;