தலைப்பு மாறிய மடிசார் மாமி!

தலைப்பு மாறிய மடிசார் மாமி!

செய்திகள் 21-Apr-2014 10:17 AM IST VRC கருத்துக்கள்

மிதுன், மான்சி ஜோடியாக நடித்துள்ள படம் ‘மடிசார் மாமி’. ரஞ்சித் போஸ் இயக்கியுள்ள இப்படத்தை சுஷாந்த் கத்ரு தயாரித்திருக்கிறார். இப்படம் சென்சார் முடிந்து வெளியாக இருந்த நிலையில் இப்படத்தின் தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ‘’மடிசார் மாமி’ என்ற தலைப்பை மாற்றும்படி நீதி மன்றம் உத்தரவிட்டது. இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் சுஷாந்த் கத்ரு கருத்து தெரிவிக்கையில், ‘‘நீதி மன்றத்தின் உத்தரவுபடியும், எந்த ஒரு மனிதனின் மனதையும் புண்படுத்துவது சரியல்ல என்றா உரிய நோக்கத்தோடும் ‘மடிசார் மாமி’ என்ற தலைப்பை மற்றி இப்போது படத்திற்கு ‘புளிப்பு இனிப்பு’ என்று வைத்துள்ளோம். குடும்பத்துடன் பார்க்கக் கூடிய காமெடி படமாக உருவாகியுள்ள இப்படத்தை அடுத்த மாதம் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எங்க காட்டுல மழை - டிரைலர்


;