ஆர்யாவின் தம்பி அறிமுகமாகும் படம்!

ஆர்யாவின் தம்பி அறிமுகமாகும் படம்!

செய்திகள் 19-Apr-2014 5:23 PM IST VRC கருத்துக்கள்

தி ஷோ பீப்பிள்’ என்ற நிறுவனம் தயாரிக்கும் படம் 'அமர காவியம் '. இப் படத்தின் இறுதிகட்ட படபிடிப்பு முடிவடைந்தது. ‘நான் ' திரைப் படம் மூலம் திரை உலகினரின் கவனத்தை ஈர்த்த ஜீவா ஷங்கர் ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ள காதல் கதை ’அமரகாவியம்’ இந்தப் படத்தில் ஆர்யாவின் தம்பி சத்யா கதாநாயகனாக நடிக்க கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார் மியா ஜார்ஜ் .

இந்தப் படம் குறித்து இயக்குனர் ஜீவா ஷங்கர் கூறும்போது, ‘‘நான் ' படத்தில் ஒரு வித்தியாசமான கதையை சொன்னதுபோல், இப்படத்திலும் முற்றிலும் ஒரு புதிய பாணியை திரைக் கதை அமைப்பில் கையாண்டு இருக்கிறேன் .

நான் பொதுவாகவே கதையை எழுதும்போதே அந்த கதைக்கான களத்தில் இருந்தே, தட்ப வெப்பத்தையும் உணர்ந்து எழுதுவது வழக்கம். விஞ்ஞானத்தை போலவோ , மெய்ஞானத்தை போலவோ அல்ல காதல். நாம் அனுபவித்தது , உணர்ந்தது என வாழ்வில் ஐக்கியமாகி போன ஒரு உணர்வு! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம் உண்டு. ' அமர காவியம் ' படத்தில் எல்லோருடைய காதலும் இருக்கும்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இது வேதாளம் சொல்லும் கதை - டீசர்


;