அஜித், கௌதம் மேனனுடன் இணையும் விவேக்!

அஜித், கௌதம் மேனனுடன் இணையும் விவேக்!

செய்திகள் 19-Apr-2014 12:18 PM IST VRC கருத்துக்கள்

கௌதம் மேனன் முதன் முதலாக இயக்கி வெற்றிபெற்ற படம் ‘மின்னலே’. மாதவன் - ரீமாசென் ஜோடியாக நடித்து, 2001-ல் வெளியான இப்படத்தில் நகைச்சுவை நடிகர் விவேக்கும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து கௌதம் மேனன் நிறைய படங்களை இயக்கினாலும் அந்தப் படங்களில் விவேக் நடிக்கவில்லை. ‘மின்னலே’ படம் வெளியாகி கிட்டத்தட்ட 13 வருடங்கள் ஆன நிலையில், இப்போது அஜித்தை வைத்து கௌதம் மேனன் இயக்கி வரும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது விவேக்குக்கு! இதற்கு முன்னால் அஜித் நடித்த பல படங்களில் விவேக் நடித்திருக்கிறார் என்றாலும், கௌதம் மேனன் இயக்கத்தில் விவேக் நடிக்கும் இரண்டாவது படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;