ஆஸ்திரேலியா செல்லும் கமல் டீம்!

ஆஸ்திரேலியா செல்லும் கமல் டீம்!

செய்திகள் 19-Apr-2014 11:51 AM IST VRC கருத்துக்கள்

கமல்ஹாசனின் ‘உத்தம வில்லன்’ படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் துவங்கி இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அங்கு டாக்கி போர்ஷன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கிய படக்குழுவினர், அடுத்து பாடல் காட்சிகளின் படப்பிடிப்புக்காக ஆஸ்திரேலியா செல்லவிருக்கின்றனர். ஆஸ்திரேலியாவில் வருகிற 26-ஆம் தேதி துவங்கவுள்ள பாடல் காட்சிகளின் படப்பிடிப்பு தொடர்ந்து மே 3-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. ரமேஷ் அரவிந்த் இயக்கி வரும் இப்படத்தில் கமல்ஹாசனுடன் பூஜா குமார், ஆன்ட்ரியா, ஜெயராம், பார்வதி மேனன், இயக்குனர்கள் கே.பாலச்சந்தர், கே.விஸ்வநாத் போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள் என்பதும், இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசை அமைக்கிறார் என்பதும் உங்களுக்கு தெரியுமே!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆங்கில படம் - டிரைலர்


;