இளம் ஹீரோக்களின் ஃபேவரைட் நாயகி!

இளம் ஹீரோக்களின் ஃபேவரைட் நாயகி!

செய்திகள் 19-Apr-2014 10:26 AM IST VRC கருத்துக்கள்

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் மாபெரும் வெற்றி ஸ்ரீதிவ்யாவையும் புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது! இதைத் தொடர்ந்து ஸ்ரீதிவ்யா கைவசம் இப்போது எக்கச்சக்க படங்கள்! அதர்வாவுடன் ‘ஈட்டி’, ஜி.வி.,பிரகாஷ்குமாருடன் ‘பென்சில்’, விஷ்ணு விஷாலுடன் ‘ஜீவா’, சிவகார்த்திகேயனுடன் ‘டாணா’ என பல படங்களில் நடித்து வரும் ஸ்ரீதிவ்யா தான் தற்போதைய இளம் ஹீரோக்களின் ஃபேவரிட் நாயகி! இந்தப் படங்களை தொடர்ந்து ஸ்ரீதிவ்யா அடுத்து விக்ரம் பிரபுவுக்கும் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்! இந்தப் படத்தை எழில் இயக்குகிறார். ‘தேசிங்கு ராஜா’ படத்திற்கு பிறகு எழில் இயக்கும் இப்படத்தின் திரைக்கதை அமைப்பு வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறதாம்! இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் துவங்கவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கீ - டீசர்


;