அஜித் தான் என் ரோல் மாடல் !

அஜித் தான் என் ரோல் மாடல் !

செய்திகள் 18-Apr-2014 5:14 PM IST VRC கருத்துக்கள்

‘மைனா’, ‘சாட்டை’ போன்ற தரமான படங்களை தயாரித்த ஜான்மேக்ஸின் ஷாலோம் ஸ்டுடியோ பட நிறுவனம் தயாரிக்கும் ‘மொசக்குட்டி’ படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வீராவை சந்தித்தோம். ‘‘எனக்கு சின்ன வயது முதலே சினிமா மீது ஆர்வம் அதிகம்.ஆனாலும் படிப்புதான் என் முதல் சாய்ஸ் என்று படித்து முடித்தேன். நடிப்புன்னு இறங்கினால் அதற்கான முழு தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தேன். தியேட்டர் லேப் ஜெயராவிடம் நடிப்பு பயிற்சி பெற்றேன்.ஆக்‌ஷன் பிரகாஷிடம் ஸ்டன்ட் பயின்றேன்.பல மாஸ்டர்களிடம் நடனமும் கற்றேன். ஓரளவு என்னை நானே வளர்த்துக் கொண்டேன்.

நல்ல கம்பெனி, நல்ல படம் மட்டுமே என் அறிமுகத்திற்கு அங்கீகாரம் கிடைக்கும் என்று காத்திருந்தேன். நண்பர் மூலம் ஜான்மேக்ஸ் அவர்களை சந்தித்தேன். என்னை பார்த்தவுடன் இயக்குனர் ஜீவன், தயாரிப்பாளர் ஜான்மேக்ஸ் இருவரும் தாடி வளர்த்துக் கொண்டு ஒரு மாதம் கழித்து வாருங்கள், பார்க்கலாம் என்றார். அதன் படியே ஒரு மாதம் கழித்து சென்றேன். என்னை தேர்வு செய்து ‘மொசக்குட்டி’ படத்தில் ஹீரோவாக்கினார்கள். எனக்கு ரோல் மாடல் அஜித் சார் தான்.
சினிமாவில் எந்த பின் புலமும் இல்லாமல் தானாக வளர்ந்தவர் அஜித் சார்! அவரை ரொம்பவே மதிக்கிறேன். அவரது தன்னம்பிக்கை, வெற்றி, தோல்வியை ஒரே மாதிரி பாவிக்கும் பக்குவம். இது எனக்கு ரொம்பவும் பிடித்ததால் அவரையே என் ரோல் மாடலாக கொண்டிருக்கிறேன்.

திண்டுக்கல் பக்கத்தில் சின்னாளப்பட்டு கிராமத்தில் படப்பிடிப்பு . ஒரு வாரம் முன்பே போய் அந்த கிராமத்து மக்களுடன் பழகினேன். ஒரு மாதம் வெயிலில் நின்று கருத்துப் போனேன் மொசக்குட்டி என்ற கதாபாத்திரத்திற்குள் என்னை நுழைத்துக் கொண்டேன்.
ஜீவன் அருமையான ஒளிப்பதிவாளர், இயக்குனர் என்பதால் என்னை நல்ல விதமாக வெளிப்படுத்தி இருக்கிறார். ‘மொசக்குட்டி’ எனக்கு நல்ல ஒரு அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் கொடுக்கும் என்று நம்புகிறேன்’’ என்றார் வீரா.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொடிவீரன் - டீசர்


;