ரொமான்டிக் ஆக்‌ஷனுக்கு மாறும் விஷ்ணுவர்தன்!

ரொமான்டிக் ஆக்‌ஷனுக்கு மாறும் விஷ்ணுவர்தன்!

செய்திகள் 18-Apr-2014 1:46 PM IST VRC கருத்துக்கள்

‘ஆரம்பம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷ்ணுவர்த்தன் இயக்கும் படம் ‘யட்சன்’. இந்தப் படத்தினை விஷ்ணுவர்தனின் விஷ்ணுவர்தன் ஃபிலிம்ஸும், யுடிவி நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்தப் படத்தில் ஆர்யாவும் விஷ்ணுவரத்தனின் தம்பி கிருஷ்ணாவும் கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுடன் கிஷோர், ஜான் விஜய், தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், ரோபோ சங்கர் முதலானோரும் நடிக்கிறார்கள். ஆர்யா, கிருஷ்ணாவுடன் நடிப்பதற்கான கதாநாயகிகளின் தேர்வு நடந்து வருகிறது.

ரொமான்டிக் காமெடி ஆக்‌ஷன் படமாக உருவாக இருக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை ‘ஆரம்பம்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ஓம்பிரகாஷ் கவனிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்கிறார். கலையை லால்குடி இளையராஜா கவனிக்கிறார். இப்படத்தின் துவக்க விழா சமீபத்தில் நடந்தது. விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ள இப்படத்தினை பொங்கல் வெளியீடாக திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.

‘அறிந்தும் அறியாமலும்’, ‘ஆரம்பம்’ என இரண்டு ஹீரோ கதைகளை இயக்கிய விஷ்வர்தன் இயக்கும் மூன்றாவது இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் இது! இந்தப் படத்தின் மூலம் தனது அண்ணன் இயக்கத்தில் முதன் முதலாக நடிக்கிறார் கிருஷ்ணா!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தில்லுக்கு துட்டு 2 டீஸர் 02


;