’டைட்டானிக்’ சாதனையை முறியடித்த படம்!

’டைட்டானிக்’ சாதனையை முறியடித்த படம்!

செய்திகள் 18-Apr-2014 12:39 PM IST VRC கருத்துக்கள்

சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி சரித்திரம் படைத்த படம் ‘திருசியம்’. மோகன்லால், மீனா நடித்து ஜீத்து ஜோசப் இயக்கிய இப்படம் கேரளாவில் மட்டுமல்லாமல், உலகம் முழுக்க வசூலை அள்ளியது! இப்படம் சென்னையிலும் 100 நாட்கள் தொடர்ந்து ஓடியதைப் போல ஐக்கிய அரபு நாடுகளிலும் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளது. ஐக்கிய அரபு நாடுகளில் வெளியாகி 100 நாட்கள் தொடர்ந்து ஓடிய முதல் படம் ‘டைட்டானிக்’ ஆங்கில படமாம்! இப்போது ‘டைட்டானிக்’ படத்தின் சாதனையை ’திருசியம்’ முறியடித்துள்ளது. அதுமாதிரி ஐக்கிய அரபு நாடுகளில் வெளியாகி 100 நாட்கள் தொடர்ந்து ஓடிய முதல் மலையாள படமும் ’திருசியம்’ தான்! கடந்த ஜனவரி மாதம் 2 –ஆம் தேதி எல்டோரடோவில் வெளியான ’திருசியம்’ 100-வது நாளை கடந்து இன்னமும் அங்கு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறதாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மதுரவீரன் - கொம்புள கொம்புள பாடல் வீடியோ


;