சண்டையுடன் ஆரம்பித்த அஜித் படம்!

சண்டையுடன் ஆரம்பித்த அஜித் படம்!

செய்திகள் 18-Apr-2014 12:00 PM IST VRC கருத்துக்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஆரம்பமானது! அஜித் வில்லன்களுடன் மோதும் சண்டை காட்சிகளுடன் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு இப்போது தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடந்த மூன்று நாட்களாக முழுக்க முழுக்க இரவு நேரத்திலேயே படம் பிடிக்கப்பட்டுள்ளது இந்த சண்டை காட்சிகள்! கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் பெயரிடப்படாத படத்திற்கு ஒளிப்பதிவு செய்யும் டான் மெகார்தர் தான் அஜித் நடிக்கும் படத்திற்கும் ஒளிப்பதிவாளர். கௌதம் மேனன் இயக்கத்தில், டான் மெகார்தர் ஒளிப்பதிவில் இந்த அதிரடி சண்டை காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் படமாகியிருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் முதன் முதலாக அஜித்துடன் முக்கிய கேர்கடர்களில் அருண் விஜய், ஆதி ஆகியோரும் கை கோர்த்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

S3 - வை வை வை வைஃபை சாங் டீசர்


;