கோவாவில் அஞ்சான்!

கோவாவில் அஞ்சான்!

செய்திகள் 18-Apr-2014 10:18 AM IST VRC கருத்துக்கள்

சூர்யா, லிங்குசாமி இணைந்துள்ள ‘அஞ்சான்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் துவங்கி இப்போது கோவாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தின் ஷூட்டிங் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், படத்திற்கான அதிரடி சண்டை காட்சிகளை படம் பிடிக்க, கோவாவில் மிகப் பிரம்மாண்டமான செட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இப்போது அந்த செட்டில்தான் ‘அஞ்சான்’ படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி வருகிறார்கள்.

இந்தப் படத்தில் சூர்யாவுடன் முதன் முதலாக சமந்தா ஜோடி சேர்ந்திருக்க, ஒளிப்பதிவுக்கு சந்தோஷ் சிவன், இசைக்கு யுவன் சங்கர் ராஜா என பெரும் கூட்டணியில் உருவாகி வரும் இப்படத்தை ’திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனமும், யுடிவி நிறுவனமும் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. ‘சிங்கம் 2’ எனும் அதிரடி ஆக்‌ஷன் மெகா ஹிட் படத்திற்கு பிறகு சூர்யா நடிக்கும் படம் என்பதால் இந்தப் படம் ஆரம்பித்த நாளிலிருந்தே எக்கச்சக்க எதிர்பார்ப்பில் இருக்கிறது! இப்போது படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் படத்தின் மீதானா எதிர்பார்ப்பு இரு மடங்காகி இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - நானா thaana பாடல் வீடியோ


;