மீண்டும் ‘பையா’வின் சூப்பர்ஹிட் கூட்டணி!

மீண்டும் ‘பையா’வின் சூப்பர்ஹிட் கூட்டணி!

செய்திகள் 18-Apr-2014 10:29 AM IST Chandru கருத்துக்கள்

லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா நடிப்பில் 2007ஆம் ஆண்டு வெளிவந்த ‘பையா’ படம் அதிரிபுதிரி ஹிட்! இப்படம் வெற்றியடைந்ததில் முக்கியப்பங்கு யுவன் ஷங்கர் ராஜாவுக்கும் உண்டு. அந்த வருடத்தின் சூப்பர்ஹிட் பாடல்கள் என்றால் ‘பையா’ படத்தின் ‘அடடா... மழைடா... அட மழைடா...’, ‘பூங்காற்றே....’ உள்ளிட்ட அப்படத்தின் அத்தனை பாடல்களும்தான். இப்படம் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் கேரியரில் முக்கியப் படமாக அமைந்தது. தற்போது மீண்டும் இந்த சூப்பர்ஹிட் கூட்டணி இணைகிறது.

தற்போது ‘அட்டகத்தி’ ரஞ்சித் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் கார்த்தி இப்படத்தை அடுத்து, ‘மீண்டும் லிங்குசாமி இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். லிங்குசாமி மற்றும் அவரின் சகோதரர் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ‘எண்ணி ஏழு நாள்’ என பெயரிடப்பட்டிருக்கிறது. ‘அஞ்சான்’ படத்திற்காக சூர்யாவை இயக்கிக் கொண்டிருக்கும் லிங்குசாமி, இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்ததும், கார்த்தியை இயக்கவிருக்கிறராம்! இப்படத்திற்கும் யுவன் ஷங்கர் ராஜாதான் இசையமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக ஆகஸ்ட் மாதம் முதல் லிங்குசாமி - கார்த்தி - யுவன் கூட்டணி படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் எனத் தெரிகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - எழு வேலைக்காரா பாடல் வீடியோ


;