‘ஜில்லா’ 100-ஆவது நாள் விழாவில் விஜய்!

‘ஜில்லா’ 100-ஆவது நாள் விழாவில் விஜய்!

செய்திகள் 17-Apr-2014 3:48 PM IST VRC கருத்துக்கள்

விஜய் நடித்த, ‘ஜில்லா’ படம் 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடியதை முன்னிட்டு சென்னை எக்மோரிலுள்ள ஆல்பர்ட் தியேட்டரில் நாளை இப்படத்தின் 100-ஆவது நாள் வெற்றி விழா நடைபெறவிருக்கிறது. ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் ஆர்.பி.சௌத்ரி தயாரித்த இப்படத்தை, நேசன் இயக்க, விஜய், காஜல் அகர்வால், மோகன்லால், பூர்ணிமா பாக்யராஜ் முதலானோர் நடித்திருந்தார்கள். இமான் இசை அமைத்திருந்தார்! விஜய் நடித்த ’துப்பாக்கி’ படம் 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடியது.

இந்தப் படத்தை தொடர்ந்து விஜய் நடித்த ’தலைவா’ எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், அதற்கு அடுத்து விஜய் நடித்த ’ஜில்லா’ படம் பெரிய வெற்றியை பெற்றிருப்பதால் இந்த விழாவை அமர்க்களமாக நடத்த திட்டமிட்டுள்ளனர் ‘ஜில்லா’ படக்குழுவினர்! இந்த விழாவில் விஜய் உட்பட பல பிரபலங்கள் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - teaser


;