பொலிட்டிக்கல் த்ரில்லராக உருவாகும் படம்!

பொலிட்டிக்கல் த்ரில்லராக உருவாகும் படம்!

செய்திகள் 17-Apr-2014 2:42 PM IST VRC கருத்துக்கள்

தேசிய விருதுபெற்ற இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கி வரும் படம் ‘புறம்போக்கு’. இப்படத்தில் ஆர்யா, விஜய்சேதுபதியுடன் இணைந்து நடித்துவரும் ஷாம் படம் பற்றி கூறும்போது, ‘‘தமிழ்த்திரையுலகில் எனக்கு புதிய பாதையை போட்டுக் கொடுத்த படம் எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய 'இயற்கை'. அதன் பிறகு அவர் இயக்கத்தில் 'புறம்போக்கு' படத்தில் நடித்து வருகிறேன். இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் ‘மெக்காலே’. சட்டத்தை மிகவும் மதிக்கும் போலீஸ் அதிகாரி. சட்டத்திலிருந்து யாரும் தப்பிக்க முடியாது என்று நம்புகிறவர். மெக்காலே லண்டன் போய் படித்து வந்தவர். எல்லாம் சட்டப்படி தான் நடக்க வேண்டும் என்று விரும்புகிற பிடிவாத குணம் உள்ளவர். எத்தனையோ போலீஸ் அதிகாரிகளைப் பார்த்திருப்போம். இந்தப் படத்தில் ஒரு புதிய போலீஸ் அதிகாரியை புதிய பரிமாணத்தில் ஜனநாதன் உருவாக்கியிருக்கிறார். அது ஸ்டைலிஷாக இருக்கும்.

என்னோட பாத்திரம் சட்டத்தை மதிக்கிற கதாபாத்திரம் என்றால் ஆர்யா எனக்கு நேர்மாறாக சட்டத்தை மிதிக்கிறவர். விஜய் சேதுபதி இன்னொரு பக்கம். எங்கள் இரண்டு பேருடனும் அவர் தொடர்பில் இருப்பவர். படத்தில் எங்கள் 3 பேரின் கதாபாத்திரங்களும் வெவ்வேறு மாதிரியாக இருக்கும். ஒன்றுக் கொன்று பொருந்தாத தனித்தனி ஐடியாலஜி கொண்டவை! தான் நினைப்பதே சரி, செய்வதே சரி என்று இருப்பவர்கள். மூவருக்கும் பேலன்ஸ் செய்துதான் காட்சிகள் வைத்திருக்கிறார் இயக்குனர்.

ஆர்யாவும், நானும் நடித்த காட்சிகள் பெங்களூரில் படமாக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதியுடனான சில காட்சிகளை சென்னையில் நடிக்கப் போகிறேன். ஜூன் மாதம் முதல் நாங்கள் மூன்று பேரும் 44 நாட்கள் இணைந்து நடிக்க இருக்கிறோம். ‘புறம்போக்கு’ ஒரு பொலிடிக்கல் த்ரில்லர் படமாக இருக்கும்'' என்றார் ஷாம் மகிழ்ச்சியுடன்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இது வேதாளம் சொல்லும் கதை - டீசர்


;