நன்றி தெரிவித்த சசிகுமார்!

நன்றி தெரிவித்த சசிகுமார்!

செய்திகள் 17-Apr-2014 2:06 PM IST VRC கருத்துக்கள்

மறைந்த ‘கேமிராக் கவிஞர்’ பாலுமகேந்திரா இயக்கி, நடித்த ‘தலைமுறைகள்’ படத்திற்கு தேசியவிருது கிடைத்துள்ளதையொட்டி, இப்படத்தை தயாரித்த நடிகரும், இயக்குனருமான சசிகுமார் நன்றி தெரிவித்து ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளார்! அதில்,

‘’எங்களது ‘கம்பெனி புரொடக்‌ஷன்ஸ்’ தயாரிப்பில் திரு.பாலுமகேந்திரா நடித்து, இயக்கி வெளிவந்த ‘தலைமுறைகள்’ படத்திற்கு 2013-ஆம் ஆண்டின் சிறந்த தேசிய ஒருமைப்பாட்டு படத்திற்கான தேசிய விருது வழங்கிய மத்திய அரசுக்கும், சிறந்த படத்தை தயாரிக்க காரணமாக இருந்த மறைந்த திரு. பாலுமகேந்திரா அவர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றி!

தொடர்ந்து எனக்கு ஆதரவு அளித்து வரும் அனைத்து பத்திரிகை, தொலைக்காட்சி, இணையதள, பண்பலை ஊடக நண்பர்களுக்கும் இந்த தருணத்தில் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். எனது சொந்த பணியின் காரணமாக தற்போது வெளியூரில் இருப்பதால் அனைவரையும் நேரில் சந்திக்க இயலவில்லை. விரைவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன்’’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார் சசிகுமார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிரம்மன்


;