‘பூஜை’ படத்தின் கதை இதுதான்!

‘பூஜை’ படத்தின் கதை இதுதான்!

செய்திகள் 17-Apr-2014 1:42 PM IST VRC கருத்துக்கள்

‘தாமிரபரணி’ படத்திற்கு பிறகு ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம் ’பூஜை’. இப்படத்தின் பூஜையும், ஃபோட்டோ ஷூட்டும் சமீபத்தில் நடந்தது. ’பூஜை’ படத்தின் கதை குறித்து இயக்குனர் ஹரி கூறும்போது,

“நாட்டில் இப்போது இருக்கிற முக்கியமான ஒரு பிரச்சனையை எதிர்த்து ஹீரோ போராடுகிறான். அதை குடும்ப பின்னணி, அழுத்தமான காதல் சேர்த்து சொல்கிறோம். சேஸிங், ஆக்‌ஷன் காட்சிகளுடன் ஆழமான காதலும் படத்தில் இருக்கிறது. முக்கோணக் காதல் கதை மாதிரி, இது முக்கோண ஆக்‌ஷன் கதை! கதை கோயம்பத்தூரில் ஆரம்பித்து பீகாரில் முடிகிற மாதிரி அமைக்கப்பட்டுள்ளது.
ஏழு வருடங்களுக்கு முன் விஷாலுடன் இணைந்து ‘தாமிரபரணி’ படத்தை பண்ணினேன். அது முழுநீள ஆக்‌ஷன் படம் கிடையாது. விட்டுக் கொடுத்தால் வாழ்க்கையில பிரச்சனை வராது என்ற குடும்ப சென்டிமென்ட் கதைதான். இந்த ஏழு வருட காலத்தில் ஆக்‌ஷன், டான்ஸ் மட்டுமில்லாம ஒரு பெர்ஃபார்மராகவும் விஷால் வளர்ந்திருக்கிறார். அது மாதிரி ‘பூஜை’ படமும் நான் ஏற்கெனவே பண்ணிய படங்களிலிருந்து மாறுபட்டதாக இருக்கும். இப்படி எங்க இரண்டு பேருக்கும் அடுத்த லெவல் பாய்ச்சலாக இப்படம் இருக்கும்.

படத்துக்கு ரொம்பவும் மாடர்னா ஒரு பெண் தேவைப்பட்டார். அந்த மாடர்ன் லுக், புரொஃபஷனல் டச் எல்லாமே ஸ்ருதியிடம் இருக்கிறது. என் வழக்கமான ஸ்டைலில் இருந்து விலகி இப்படத்தில் ரொம்ப மாடர்னா ஒரு லவ் போர்ஷனை வைத்திருக்கிறேன். படத்தின் ஆரம்பத்தில் இருந்து க்ளைமாக்ஸ் வரை ஸ்ருதிக்கு வேலை இருந்துகிட்டே இருக்கும்’’ என்கிறார் இயக்குனர் ஹரி!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - எழு வேலைக்காரா பாடல் வீடியோ


;