சூர்யா, விஜய்யை தொடர்ந்து விக்ரமுடன்!

சூர்யா, விஜய்யை தொடர்ந்து விக்ரமுடன்!

செய்திகள் 17-Apr-2014 12:55 PM IST VRC கருத்துக்கள்

சூர்யாவுடன் ’அஞ்சான்’, விஜய்யுடன் ‘கத்தி’ ஆகிய படங்களில் நடித்து வரும் சமந்தா, தற்போது தெலுங்கிலும் படு பிசியான நடிகை! தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் பல படங்களை கமிட் செய்து பம்பரமாக சுழன்று நடித்து வரும் சமந்தா, அடுத்து ‘சீயான்’ விக்ரமுடனும் ஜோடி சேரவிருக்கிறார்! ’ஐ’ படத்தை தொடர்ந்து விக்ரம், விஜய் மில்டன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.

‘கோலி சோடா’வின் அதிரடி வெற்றியை தொடர்ந்து விஜய் மில்டன் இயக்கும் இப்படத்தில் விக்ரமுடன் ஜோடியாக நடிக்க சமந்தாவிடம் கதையின் ஒன் லைனை சொன்னதாகவும், அந்த ஒன் லைன் சமந்தாவுக்கு பிடித்து விட்டதாகவும், அதனால் விக்ரமுடன் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. ஆக, சூர்யா, விஜய்யை தொடர்ந்து விக்ரமுடனும் ஜோடி சேருகிறார் சமந்தா!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - டிரைலர்


;