தமிழிலும் கிளாமருக்கு மாறும் ஸ்ருதிஹாசன்!

தமிழிலும் கிளாமருக்கு மாறும் ஸ்ருதிஹாசன்!

செய்திகள் 17-Apr-2014 12:12 PM IST Inian கருத்துக்கள்

‘பாண்டியநாடு’, ‘நான் சிகப்பு மனிதன்’ என தொடர் வெற்றிப் படங்களாக கொடுத்து வரும் விஷால், தனது ’விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் சார்பாக அடுத்து தயாரிக்கும் படம் ‘பூஜை’. ஹரி இயக்கும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கவுள்ளார். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்கவுள்ளது. முன்னதாக நடைபெற்ற இப்படத்தின் ஃபோட்டோ ஷூட்டில் விஷால், ஸ்ருதிஹாசன் கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு, ஹிந்தியில் தாராள கவர்ச்சி காட்டும் ஸ்ருதிஹாசன் ‘பூஜை’ பத்தில் ரசிகர்களுக்கு தாராளம் காட்டவிருக்கிறாராம்! இப்படம் நாளை படப்பிடிப்பு ஆராம்பமாகி, வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தை அறிவித்த தேதியில் வெளியிட்டு விநியோகஸ்தர்களின் நன்மதிப்பை பெற்ற விஷால் மீண்டும் படப்பிடிப்பு மற்றும் ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டு படப்பிடிபிற்கு செல்கிறார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இம்சை அரசன் 24ஆம் புலிகேசி - மோஷன் போஸ்டர்


;