விஷ்யூ ஹேப்பி பர்த்டே சித்தார்த்!

விஷ்யூ ஹேப்பி பர்த்டே சித்தார்த்!

செய்திகள் 17-Apr-2014 11:43 AM IST VRC கருத்துக்கள்

சினிமாவில் குறுகிய காலத்தில் தனக்கான ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகர் சித்தார்த்! மணிரத்னம் இயக்கிய ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் சிறிய ஒரு கேரக்டரில் நடித்து சினிமாவில் அறிமுகமான இவரை, ஹீரோவாக அறிமுகப்படுத்திய படம் ஷங்கரின் ‘பாய்ஸ்’. இந்தப் படத்தை தொடர்ந்து ஏராளமான தமிழ் படங்கள் மற்றும் தெலுங்கு படங்களிலும், ஒரு சில ஹிந்தி படங்களிலும் நடித்துள்ள சித்தார்த் இன்றைய இளம் கன்னியரின் ‘கனவு நாயகன்’ என்று சொன்னால் அது மிகையாகாது! இவருக்கு நடிகர் என்ற முகத்துடன் சிறந்த பாடகர், தயாரிப்பாளர் என்ற பல்வேறு முகங்களும் உண்டு! தற்போது தமிழ், மற்றும் தெலுங்கு சினிமாவில் ‘ட்ரீம் பாய்’ ஆக விளங்கி வரும் சித்தார்த் பிறந்த நாள் இன்று! அவருக்கு ஹேப்பி பர்த்டே விஷஸ் சொல்வதில் ‘டாப் 10 சினிமா’வும் பெருமிதம் கொள்கிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கடவுள் இருக்கான் குமாரு - லொக்காலிட்டி பாடல் மேக்கிங்


;