நைனிடாலில் உருவான படம்!

நைனிடாலில் உருவான படம்!

செய்திகள் 17-Apr-2014 11:39 AM IST Inian கருத்துக்கள்

‘கழுகு’ படத்தைத் தொடர்ந்து கிருஷ்ணா நடித்துள்ள படம் ‘யாமிருக்க பயமே’. இப்படத்தில் ஓவியா, ‘மக்காயாலா காயமாவுவா’ பாடல் புகழ் ரூபாமஞ்சரி, அனஸ்வரா ஆகியோருடன் ஆதவ் கண்ணதாசன் மற்றும் கருணா நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல்கள் நேற்று ‘சூரியன்’ பண்பலையில் வெளியிடப்பட்டது. காமெடி, த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தை கே.வி.ஆனந்திடம் பணிபுரிந்த டிகே இயக்கியுள்ளார்.

இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட கிருஷ்ணா அனைவரையும் அறிமுகப்படுத்தி பேசும்போது, ‘‘இப்படத்தில் டெக்னீஷியன்களாக வேலை செய்த அனைவருமே புதுமுகங்கள்தான்! இதுவரை பெரிய பெரிய டெக்னீஷின்களை வைத்து பல பிரம்மாண்ட படங்களை எடுத்து வந்த ‘ஆர்.எஸ்.இன்ஃபோடெய்ன்மென்ட்’ முதல் முறையாக பல புதுமுகங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கு தயாரிப்பாளர் எல்ரெட் குமார் அவர்களுக்கு மிக்க நன்றி. படம் மிகவும் நன்றாக வந்துள்ளது. இப்படத்திற்காக இரவு பகலாக தொடர்ந்து பல நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது’’ என்றார்.

தொடர்ந்து தயாரிப்பாளர் எல்ரெட் குமார் பேசும்போது, ‘‘கோ’ படத்தின்போதே இப்படத்தின் இயக்குனர் ’டிகே’வை எனக்கு தெரியும். சுறுசுறுப்பானவர். எனக்கு நீண்ட நாட்களாக புதியவர்களை அறிமுகப்படுத்தவேண்டு என்று ஆசை! அந்த ஆசை இந்தப் படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது. இப்படம் ஊட்டியில் உள்ள பகுதியில் நடைபெறுமாறு கதைக்களம் அமைந்துள்ளது. இருந்தாலும் படத்திற்கு ஒரு அழகு சேர்க்கவேண்டி ஏரிகள், பள்ளத்தாக்குகள், மலைகள் சூழப்பட்ட குளிர்பிரதேசமான ‘நைனிடாலில்’ 75-நாட்கள் படமாக்கினோம். படத்தை பார்த்து விட்டேன். படக் குழுவினர்களுக்கு எனது பாராட்டுக்கள்’’ என்றார்.

இயக்குனர் டி.கே பேசும்போது, ‘‘இப்படத்தின் கதையை எல்ரெட் குமாரிடம் 4-மணி நேரம் சொன்னேன். கதையை கேட்ட அடுத்த நாளே படத்தை ஆரபிக்கவேண்டிய வேலைகளை பார்க்குமாறு கூறிவிட்டார்! புதிய டெக்னீஷியன்களை வைத்துக்கொண்டு படமெடுப்பதற்கு தனி துணிச்சல் வேண்டும். அதற்கு எனது நன்றி. நைனிடால் குளிரில் நடித்து கொடுத்தவர்களுக்கும், பின்னால் இருந்து அதை எடுப்பதற்கு உதவிய அனைவருக்கும் நன்றி. படம் திட்டமிட்டபடி மிகவும் நன்றாக வந்துள்ளது. கருணா அதிக நேரம் நடித்த படம் இதுவாகத்தானிருக்கும். அவர் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். கிருஷ்ணா மற்றும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் - trailer


;