தெலுங்கில் பிரபலமான தமிழ் நடிகர்!

தெலுங்கில் பிரபலமான தமிழ் நடிகர்!

செய்திகள் 17-Apr-2014 11:31 AM IST Inian கருத்துக்கள்

தமிழகத்தில் தாராபுரத்தை பூர்வீகமாக கொண்டவர் நடிகர் ராஜா. இவர் ஆந்திர மாநிலத்துக்கு சென்று தெலுங்கில் கிட்டத்தட்ட 32 படங்கள் நடித்துள்ளார். அவற்றில் பல வெற்றிப் படங்களாகவும், ஐந்து படங்கள் ஆந்திர மாநில அரசின் விருதுகளையும் பெற்றது. தமிழில் ‘கண்ணா’ படத்திலும் நமீதாவுடன் ‘ஜகன் மோகினி’ படத்திலும் நடித்துள்ளார்.
ரஜினிகாந்தின் பலவருட குடும்ப நண்பரான தமிழ்நாட்டைச் சேர்ந்த வின்சென்ட் என்பவரின் மகள் அம்ரிதாவை, ராஜா மணக்கிறார். இரு வீட்டார் சம்மதத்துடன் நடக்கும் இத்திருமணம் வருகிற ஏப்ரல் 25-ஆம் தேதி மாலை 5 மணிக்கு, நுங்கம்பாக்கத்திலுள்ள புனித தெரசா தேவாலயத்தில் நடக்கவுள்ளது. இதனை தொடர்ந்து சென்னை எம்.ஆர்.சி.நகர், லீலா பேலஸில் நடக்கவுள்ள வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழ், தெலுங்கு திரைப்பட உலகை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தவுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - டிரைலர்


;