பிறந்து 30 நாட்களே ஆன குழந்தைகள் நடித்த படம்!

பிறந்து 30 நாட்களே ஆன குழந்தைகள் நடித்த படம்!

செய்திகள் 17-Apr-2014 11:19 AM IST Inian கருத்துக்கள்

‘குற்றம் நடந்தது என்ன’, ‘இப்படிக்கு ரோஸ்’, உலகப்புகழ் பெற்ற கோபிக்கு அடைமொழி பெற்றுதந்த ’நீயா நானா’ போன்ற பல தொலைக்காட்சி தொடர்களை உருவாக்கியவர் ஆன்டனி. இவர் தற்போது திரைத்துறைக்குள்ளும் அடியெடுத்து வைத்துள்ளார். ‘மெர்குரி நெட்வொர்க்’ நிறுவனம் சார்பில் இவர் தயாரிக்கும் படம் ‘அழகு குட்டி செல்லம்’. இப்படத்தில் அகில், ‘பரதேசி’ ரித்விகா ஆகியோர் இலங்கை தம்பதிகளாக நடித்து வருகின்றனர். இப்படத்தை தயாரிப்பாளர் ஆன்டனியின் நண்பர் சார்லஸ் இயக்குகிறார். இயக்குனர் சார்லஸிடம் படம் குறித்து கேட்டபோது, ‘‘குழந்தைகளை மைய்யப்படுத்தி இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. குழந்தையே இல்லாத தம்பதி, நிறைய குழந்தைகளை பெற்ற தம்பதி, திருமணத்திற்கு முன்னரே குழந்தை பெற்ற தம்பதி, குழந்தையை குப்பையில் வீசும் தம்பதி என ஒன்றுக்குள் ஒன்றாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளை மையப்படுத்தி பல படங்கள் வந்திருந்தாலும், இப்படம் அவற்றிலிருந்து வேறுபட்டே நிற்கும். படம் பார்க்கும்போது நிச்சயமாக அது உங்களுக்கு புரியும். அதே நேரத்தில் சோகமான மெசேஜ் சொல்லும் படமாக இருக்குமோ என்று நினத்தால் அது தவறு! காதல், காமெடி, சென்டிமென்ட் என அனைத்தும் இருக்கும் ஒரு ஜனரஞ்சகமான படம் இது. இப்படத்தில் பிறந்து 30 நாட்களே ஆன 3 குழந்தைகளும், 12 வயதுள்ள 5 குழந்தைகளும் நடித்துள்ளனர். அது அனைவரையும் கவரும் வகையில் இருக்கும்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;