’ஐ’ நாயகனுக்கு பிறந்த நாள்!

’ஐ’ நாயகனுக்கு பிறந்த நாள்!

செய்திகள் 17-Apr-2014 11:08 AM IST VRC கருத்துக்கள்

தமிழ் சினிமாவின் தலை சிறந்த நடிகர்களை எடுத்துக் கொண்டால் அதில் விக்ரமின் பெயரும் நிச்சயம் இடம் பிடித்திருக்கும்! கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக தான் ஏற்று நடிக்கும் கேரக்டருக்காக கடுமையாக உழைப்பது, உடம்பை வருத்திக் கொள்வது என மெனக்கெடுவதில் விக்ரமும் ஒருவர்! இதற்கு உதாரணமாக அவர் நடித்த ‘சேது’, ‘அந்நியன்’, ‘தெய்வத்திருமகள்’ தற்போது நடித்து முடித்துள்ள ஷங்கரின் ’ஐ’ போன்ற பல படங்களை சொல்லலாம்! ’ஐ’ படத்தை தொடர்ந்து அடுத்து விஜய் மில்டன் இயக்கத்தில் நடிக்க ஆயத்தமாகி வரும் விக்ரமுக்கு இன்று இனிய நாள்! அதாவது இன்று அவர் பிறந்த நாள்!

இந்திய சினிமாவின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ’ஐ’ படம் விரைவில் ரிலீசாகவிருக்க, லட்சக்கணக்கான ரசிகர்களின் வாழ்த்துக்களுடன் இன்று பிறந்தநாள் காணும் விக்ரமுக்கு ‘டாப் 10 சினிமா’வும் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;