மோடியை சந்தித்தார் விஜய்!

மோடியை சந்தித்தார் விஜய்!

செய்திகள் 17-Apr-2014 10:37 AM IST Inian கருத்துக்கள்

பிரதமர் வேட்பாளராக போட்டியிடும் மோடியை நடிகர் விஜய் நேற்று மாலை கோவையில் சந்தித்தார். நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினரை கடந்த ஞாயிறன்று மோடி சந்தித்தார். அன்றே விஜய்யையும் சந்திப்பதாக இருந்தார் மோடி! ஆனால் விஜய் ஹைதராபாத்தில் ஷூட்டிங்கில் இருந்ததால் அது முடியாமல் போயிற்று! அதனால் நேற்று மாலை கோவையில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்த மோடியை சந்திக்க விஜய் கோவை சென்றார். அங்கு  நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த மோடியை விஜய் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு பற்றி விஜய் கூறும்போது,  ‘‘என்னைப் பார்த்து அன்புடன் விசாரித்தார்! எனது சினிமா உலக பயணம் குறித்து விசாரித்ததுடன் அவர் என்னைப்பற்றி தெரிந்து வைத்தது எனக்கு பெருமையாகவும், ஆச்சர்யமாகவும் இருந்தது. நாட்டின் முக்கியத் தலைவர்.  அவர் என்னை சந்திப்பதற்கு விருப்பம் தெரிவித்தது எனக்கு பெருமையான விஷயம்’’ என்றார்! இந்த சந்திப்பு குறித்து  ‘‘இது அரசியலுக்கு அப்பாற்பட்ட, மரியாதை நிமித்தமான ஒரு சந்திப்புதான்’’ என்கிறது விஜய் தரப்பு!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;