தமிழ் சினிமாவிற்கு 5 தேசிய விருதுகள்!

தமிழ் சினிமாவிற்கு 5 தேசிய விருதுகள்!

செய்திகள் 16-Apr-2014 5:35 PM IST VRC கருத்துக்கள்

மத்திய அரசு ஆண்டுதோறும் சினிமாவில் சிறந்த கலைஞர்களை தேர்வு செய்து தேசிய விருதுகள் வழங்கி வருகிறது. அதன் படி இந்த ஆண்டிற்கான சிறந்த கலைஞர்களை தேர்வு செய்து அவர்களின் பட்டியலை இன்று தில்லியில் அறிவித்துள்ளார்கள்!

இதில் சிறந்த தமிழ் மொழி படத்துக்கான விருதை ‘தங்க மீன்கள்’ திரைப்படம் பெற்றது. இந்த படத்தில் நடித்த சிறுமி சாதனாவுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரம் விருது கிடைத்துள்ளது. அத்துடன் இந்த படத்தின் "ஆனந்த யாழை" பாடலுக்காக நா.முத்துக்குமாருக்கு சிறந்த திரைப்பட பாடலாசிரியருக்கான விருதும் கிடைத்துள்ளது. மறைந்த இயக்குனர் பாலு மகேந்திரா இயக்கிய ‘ தலைமுறைகள்’ படத்துக்கு தேசிய ஒருமை பாட்டை வெளிப்படுத்தும் படப் பிரிவில் விருது கிடைத்துள்ளது. இந்த விருதுகள் தவிர, சிறந்த எடிட்டருக்கான விருது ‘வல்லினம்’ படத்தில் எடிட்டராக பணிபுரிந்த சாபு ஜோசஃபுக்கு கிடைத்துள்ளது. ஆக மொத்தம் இந்த வருடம் தமிழ் சினிமாவுக்கு 5 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது. விருது கிடைத்துள்ள அத்தனை கலைஞர்களுக்கும் ‘டாப் 10 சினிமா’ தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீரன் அதிகாரம் ஒன்று - டிரைலர்


;