2014ல் தல - தளபதி, 2015ல் ரஜினி

2014ல் தல - தளபதி, 2015ல் ரஜினி

செய்திகள் 16-Apr-2014 4:58 PM IST VRC கருத்துக்கள்

’கோச்சடையான்’ படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் படத்தில் நடிக்கிறார் என்பது உறுதியாகி விட்டது. ‘முத்து’, ‘படையப்பா’ படங்களை தொடர்ந்து ரஜினி நடிப்பில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் இப்படத்திற்கு ‘முத்து’, ‘படையப்பா’ படங்களுக்கு இசை அமைத்த ஏ.ஆர்.ரஹ்மானே இசை அமைக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தை பிரபல கன்னட - தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான ‘ராக்லைன்’ வெங்கடேஷ் தயாரிக்கிறார். இவருடன் தயாரிப்பில் ரஜினிகாந்தின் நீண்ட நாள் நண்பரான ராஜபகதூர் மற்றும் ரஜினிகாந்தின் அண்ணன் சத்ய நாராயணாவும் தயாரிப்பாளர்களாக கை கோர்க்கவிருக்கின்றனர்! மூன்று மாத காலத்தில் எடுத்து முடிக்க திட்டமிட்டுள்ள இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவுள்ள நடிகை யார் என்று இன்னும் முடிவாகவில்லை! இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக நடத்த திட்டமிட்டிருக்கிறார்களாம்! அதனால் அதற்கு தோதாக மொத்தமாக கால்ஷீட் கொடுக்கக் கூடிய நடிகை ஒருவரை தேடி வருகிறார்களாம்! வருகிற ஜூன் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று கூறப்படுகிறது.

இந்த வருட பொங்கலுக்கு விஜய் நடித்த ‘ஜில்லா’, அஜித் நடித்த ’வீரம்’ ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து படைத்ததை போல அடுத்த வருட (2015) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரஜினி நடிக்கும் இப்படத்தை ரிலீஸ் செய்து ரசிகர்களுக்கு விருந்து படைக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;