முடிவுக்கு வந்தது ‘தெனாலி ராமன்’ பிரச்சனை!

முடிவுக்கு வந்தது ‘தெனாலி ராமன்’ பிரச்சனை!

செய்திகள் 16-Apr-2014 3:25 PM IST VRC கருத்துக்கள்

வடிவேலு நடித்துள்ள, ‘தெனாலி ராமன்’ படத்திற்கு சில தெலுங்கு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், இந்த பிரச்சனை நீதிமன்றம் வரைக்கும் சென்றுள்ளது அல்லவா? இந்த வழக்கு சம்பந்தமாக இன்று மாலை தீர்ப்பு வழங்குவதாக நீதிமன்றம் அறிவித்திருந்தது. ஆனால் அதற்கு முன்னதாகவே இப்பிரச்சனையை சுமுகமாக பேசி தீர்க்கும் விதமாக வடிவேலு உட்பட ‘தெனாலி ராமன்’ படக்குழுவினரும், தெலுங்கு அமைப்பினரும் ஒன்றாக கூடி, கலந்து பேசி பிரச்சனையை தீர்த்து வைத்துள்ளனர், இதனால் படம் திட்டமிட்டபடி வருகிற 18-ஆம் தேதி ரிலீசாகும் என்று தெரிவித்திருக்கிறார்கள். இதனால் இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை, சம்பந்தப்பட்டவர்கள் இன்று மாலைக்குள் வாபஸ் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இப்படை வெல்லும் - ஆடியோ பாடல்கள்


;