‘தெனாலி ராமனு’டன் இரண்டு டீஸர்கள்!

‘தெனாலி ராமனு’டன் இரண்டு டீஸர்கள்!

செய்திகள் 16-Apr-2014 2:12 PM IST VRC கருத்துக்கள்

’ஏ.ஜி.எஸ்’ நிறுவன தயாரிப்பில் வடிவேலு இரட்டை வேடத்தில் நடித்துள்ள பிரம்மாண்ட படம் ’தெனாலி ராமன்’. இப்படம் வருகிற 18-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. கௌதம் கார்த்திக் - ப்ரியா ஆனந்த் ஜோடியாக நடிக்க, ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி வரும் ‘வை ராஜா வை’, மற்றும் அதர்வா - ப்ரியா ஆனந்த் நடிப்பில் யுவராஜ் போஸ் இயக்கி வரும் ‘இரும்புக்குதிரை’ ஆகிய படங்களும் ‘ஏ.ஜி.எஸ்.’ நிறுவனத்தின் தயாரிப்புகள் தான்! இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் கிட்டத்தட்ட முடியும் கட்டத்தில் இருக்கிறது.

ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு வடிவேலு நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் ’தெனாலி ராமன்’ என்பதால் இப்படத்தை பெரிதும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறது கோலிவுட் மற்றும் ரசிகர் வட்டாரம்! இதனால், உலகம் முழுக்க நாளை மறுநாள் வெளியாகவிருக்கும் ‘தெனாலி ராமன்’ படத்துடன் ‘வை ராஜா வை’, ‘இரும்புக்குதிதிரை’ ஆகிய படங்களின் ஃபர்ஸ்ட் லுக் டீஸரை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள் ‘ஏ.ஜி.எஸ்.’ நிறுவனத்தினர்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - டீசர்


;