ரசிகர்களுக்கு அஜித்தின் பிறந்தநாள் பரிசு!

ரசிகர்களுக்கு அஜித்தின் பிறந்தநாள் பரிசு!

செய்திகள் 16-Apr-2014 11:54 AM IST VRC கருத்துக்கள்

ஹிட் ஆன பழைய திரைப்படங்களை இன்றைய புதிய தொழில்நுட்பத்திற்கு அதாவது, டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வெளியிடுவது சமீபகால டிரென்ட்! சிவாஜி கணேசன் நடித்த ’கர்ணன்’, ‘வசந்தமாளிகை’, எம்.ஜி.ஆர். நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’, கமல் - ரஜினி நடித்த ‘நினைத்தாலே இனிக்கும்’ போன்ற பல படங்கள் இப்படி சமீபத்தில் வெளியாகின! இந்த வரிசையில் அடுத்து அஜித் - ஷாலினி ஜோடியாக நடித்து, சரண் இயக்கிய ‘அமர்க்களம்’ படமும் டிஜிட்டல் மயமாகிறது! அஜித்தின் 25-ஆவது படமாக அமைந்த இப்படம் 1999-ல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது அனைவருக்கும் தெரிந்த விஷயம்! டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள ’அமர்க்களம்’ படத்தை அஜித்தின் பிறந்த நாளான மே-1ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்! அதாவது, ரசிகர்களுக்கு அஜித்தின் பிறந்த நாள் பரிசாக ‘அமர்க்களம்’ படம் மீண்டும் வெளியாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;