அஜித்துடன் அருண் விஜய் டீல்!

அஜித்துடன் அருண் விஜய் டீல்!

செய்திகள் 16-Apr-2014 11:32 AM IST VRC கருத்துக்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கி விட்டது! இந்தப் படத்தில் அஜித்துடன் முக்கிய கேர்கடர்களில் அருண் விஜய், ஆதி ஆகியோரும் நடிக்கிறார்கள் என்ற தகவலை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். இந்த தகவல்களை படக் குழுவினர் இன்னமும் அதிகாரபூர்வமாக அறிவிக்காத நிலையில், கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித்துடன் தான் நடிக்கவிருப்பதாக அருண் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கௌதம் மேனன் - அஜித் இணையும் படத்தில் நடிக்கும் மிகப் பெரிய வாய்ப்பு குறித்து பெருமிதத்தோடு குறிப்பிட்டுள்ள அருண் விஜய், தான் நடித்து முடித்துள்ள ’டீல்’ திரைப்படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்.

அஜித், கௌதம் மேனன் இணைந்துள்ள இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசை அமைப்பாளர் என்பதும் உறுதியாகி விட்டது. ஹாரிஸ் இசையில் இந்தப் படத்தில் மொத்தம் 6 பாடல்கள் இடம் பெறவிருப்பதாக கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;