ரசிகர்கள் திணறடித்த இசைவெளியீட்டு விழா!

ரசிகர்கள் திணறடித்த இசைவெளியீட்டு விழா!

செய்திகள் 16-Apr-2014 10:55 AM IST Inian கருத்துக்கள்

ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனரான ஜீவனின் உதவியாளர் ஸ்ரீநாத் இயக்கியுள்ள படம் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’. ‘மரியாதை ராமண்ணா’ படத்தின் தெலுங்கு ரீமேக்காக உருவாகியிருக்கும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை தேவி தியேட்டர் வளாகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் பார்த்திபன், எஸ்.எஸ்.ராஜமௌலி, எம்.ராஜேஷ் மற்றும் யுடிவி தனஞ்செயன், உதநிதி ஸ்டாலின், மயில்சாமி உட்பட பலர் கலந்துகொண்டனர். எஸ்.எஸ்.ராஜமௌலி ட்ரைலர் மற்றும் ஆடியோவை வெளியிட்டார்.

தேவி தியேட்டர் வளாகம் முழுவதும் ரசிகர்கள் வெள்ளம் போல் திரண்டிருந்தனர். விழாவிற்கு வந்த உதயநிதி, பார்த்திபன் உட்பட பலர் ரசிகர்கள் வெள்ளத்தில் திணறிபடியேதான் தியேட்டருக்குள் வரமுடிந்தது. ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தின் ஹீரோ சந்தானம் இவ்விழாவில் பேசியதாவது-

‘‘இந்தப்படத்தில் நான் ஹீரோவாக நடிப்பதற்கு காரணமே என் ரசிகர்கள்தான். எனது நண்பர்களும் ரசிகர்களும் நான் ‘லொள்ளு சபா’ பண்ணும் காலத்திலிருந்தே என்னை ஹீரோவாக நடிக்க கேட்டுகொண்டேயிருந்தார்கள். அப்போது நான் அவர்களிடம் அதற்கான நேரம் வரும் நடிக்கிறேன் என்று சொன்னேன். இதோ அந்த நேரம் வந்துவிட்டது. ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘மரியாதை ராமண்ணா’ படம் பார்த்தபோது அதை தமிழில் நான் ஹீரோவாக பண்ணுவதற்கு ஏற்ற படம் என்பதை புரிந்து கொண்டேன். எனது தயாரிப்பில் வெளிவந்த ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்திற்கு பிறகு இப்படத்தை எடுத்தால் சரியாக இருக்கும் என்று நினைத்தேன். என் படம் பார்க்க வரும் ரசிகர்கள் ஏமாறக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். இப்படம் எந்தவிதத்திலும் ரசிகர்களை ஏமாற்றாது. நிச்சயம் வெற்றி பெறும்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - டிரைலர்


;