பெண்களுக்கு ஆதரவு தரும் படம்!

பெண்களுக்கு ஆதரவு தரும் படம்!

செய்திகள் 16-Apr-2014 10:41 AM IST Inian கருத்துக்கள்

'கே.ஆர்.கே.மூவீஸ்' சார்பில் கே.ஆர்.கண்ணன் அதிக பொருட்செலவில் தயாரித்திருக்கும் படம் 'போங்கடி நீங்களும் உங்க காதலும்'. இந்தப் படத்தின் கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்குவதோடு கதாநாயகனாகவும் நடித்துள்ளார் எம்.ஏ.ராமகிருஷ்ணன். கதாநாயகிகளாக ஆத்மியா மற்றும் காருண்யா ஆகியோர் நடிக்கிறார்கள்.

ராமகிருஷ்ணனிடம் படம் பற்றி கேட்டபோது, ‘‘பெண்களின் பலம், பலவீனம் ஆண்கள் மீது அவர்கள் வைத்திருக்கும் அசாத்திய நம்பிக்கை தான்.அந்த நம்பிக்கையை பெரும்பாலான ஆண்கள் காப்பாற்றுவதில்லை. காதலிக்கும்போது இருக்கும் அக்கறையும், அன்பும் கல்யாணத்திற்கு பிறகு முற்றிலும் குறைந்து விடுகிறது. இதற்கு முக்கிய காரணம் ஆண்களின் அலட்சியமே! சில ஆண்கள் தற்போதைய தொழில் நுட்பங்களை ( Social Network )தவறாக பயன்படுத்திக்கொண்டு பெண்களுக்கு மனதளவிலும், உடலளவிலும் பல இடையூறுகள் தந்து சமூக அவலங்களுக்கு உட்படுத்தி அவர்களின் வாழ்கையையும் சீரழிக்கிறார்கள்.

ஒரு தவறான நட்பினாலும், காதலாலும் ஏற்படும் பாதிப்புகளை பெண்களுக்கு உணர்த்தவும், இந்த மோசமான சூழ்நிலையில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ளவும்,அவர்களின் மீது அக்கறை கொண்டு உருவாக்கப்பட்டதே இந்தத் திரைப்படம்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எந்த நேரத்திலும் - டிரைலர்


;