உதயநிதிக்கு இசையமைக்கும் அனிருத்!

உதயநிதிக்கு இசையமைக்கும் அனிருத்!

செய்திகள் 16-Apr-2014 10:27 AM IST Chandru கருத்துக்கள்

‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘இது கதிர்வேலன் காதல்’ படத்தைத் தொடர்ந்து உதயநிதி தற்போது ‘நண்பேன்டா’ படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் நயன்தாரா, சந்தானம், ஹாரிஸ் ஜெயராஜ் என தனது முந்தையை கூட்டணியுடன் கைகோர்த்திருக்கிறார் உதயநிதி. இப்படத்தைத் தொடர்ந்து தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் பேனரில் இரண்டு படங்களில் அவர் நாயகனாக நடிக்கவிருக்கிறார். அதில் ஒரு படத்தை ‘இது கதிர்வேலன் காதல்’ படத்தை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரனே இயக்க, மற்றொரு படத்தை ‘என்றென்றும் புன்னகை’ படத்தின் இயக்குனர் ஏ.ஹெச்.அஹமத் இயக்குகிறார். எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கும் படத்தில் உதய்க்கு ஜோடியாக லக்ஷ்மிமேனன் ஜோடியாக நடிக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், அஹமத் இயக்கும் படத்தில் முதன்முறையாக அனிருத்தை இசையமைக்க வைக்க இருக்கிறார் உதயநிதி. ஏற்கெனவே ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் ‘வணக்கம் சென்னை’ படத்தில் அனிருத்தின் பாடல்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால், தான் ஹீரோவாக நடிக்கும் படத்திலும் அனிருத்தையே ஒப்பந்தம் செய்திருக்கிறாராம். ‘நண்பேன்டா’ படத்தின் வேலைகள் முடிவடைந்ததும் இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பிலும் கலந்துகொள்வாராம் உதய்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - நானா thaana பாடல் வீடியோ


;