ஆர்யா, தினேஷைத் தொடர்ந்து விக்ரமுடன்...

ஆர்யா, தினேஷைத் தொடர்ந்து விக்ரமுடன்...

செய்திகள் 15-Apr-2014 5:14 PM IST Top 10 கருத்துக்கள்

ஆர்யா நடிப்பில் உருவான ‘ராஜா ராணி’, தினேஷ் பார்வையற்றவராக நடித்து பாராட்டுக்களை அள்ளிக்குவித்த ‘குக்கூ’ படங்களைத் தொடர்ந்து விக்ரம் நடிக்கும் படம் ஒன்றை தயாரிக்கவிருக்கிறது ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ். ‘கோலி சோடா’ படத்தின் அதிரிபுதிரி வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் விஜய் மில்டன் இயக்கும் இப்படத்தை ஃபாக்ஸ் ஸ்டாருடன் இணைந்து ‘தி நெக்ஸ்ட் பிக் ஃபிலிம்’ புரொடக்ஷன் தயாரிக்கிறது.

‘ஐ’ படத்திற்குப் பின்னர் ‘ஸ்பெஷல் 26’ ஹிந்திப் படத்தின் ரீமேக்கில் விக்ரம் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில், முதலில் அவர் விஜய் மில்டன் இயக்கும் படத்தில்தான் நடிக்கிறார் என அவருக்கு நெருங்கிய வட்டாரங்களிலிருந்து லேட்டஸ்டாக தகவல்கள் கிடைத்துள்ளன. இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிப்பவர், டெக்னீஷியன்கள் யார் யார் என்பன போன்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளிவருமாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;